Categories
தேசிய செய்திகள்

பறவை மோதி செயலிழந்த போர் விமானம்..!!

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போர் விமானம் பறவை மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப் படை வீரர்கள் போர் விமானங்களை சோதனை செய்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சோதனையின் மூலம் விமானங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் விமானப்படை வீரர்கள் போரின்போது விமானங்களை  எவ்வாறு இடத்திற்கு ஏற்றபடி சாதகமாக இயக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஜாகுவார் போர் விமானத்தை பயிற்சியில் ஈடுபட செய்தபோது விமானம் பறந்து கொண்டிருக்கும் நிலையில் பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது. இதனால் ஜாகுவார் போர் விமானத்தின் ஒரு இன்ஜின்  செயலிழந்தது .இதனை அறிந்த விமானி நிதானத்துடன் செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். விமானியின் இந்த துணிச்சல் செயலை சக ராணுவ வீரர்கள்  பாராட்டினார்.

Categories

Tech |