Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில்… புறப்பட்டு சென்ற சங்கத்தினர்… நடைபெறும் 5 நாள் போராட்டம்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டதின் போது 300 விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு சென்று போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனைதொடர்ந்து தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் தம்புசாமி உட்பட 25 பேர் டெல்லிக்கு சென்றுள்ளனர். மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட கோரியும், புதிய மின்சார மசோதாவை எதிர்த்தும் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை இந்த போராட்டம் நடைபெற உள்ளது என மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |