Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 8 இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா.. மொத்தம் 28 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் 8 இராணுவ அதிகாரிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தானிலும் பரவியுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே சிந்து மாகாணத்தில் 14 பேர், கில்ட் -பல்டிஸ்தான் பகுதியில் 5 பேர் மற்றும் பலுசிஸ்தானில் ஒருவர் உட்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ராவல் பிண்டியில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவர் குழு பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில், 3 லெஃபப்டினன்ட் கர்னல்கள், 2 கர்னல்கள், 2 பிரிகேடியர்கள் 1 மேஜர் ஜெனரல் மட்டத்திலான அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |