Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்கள் கூடும் இடங்களில்… முகக்கவசம் அணியாமல் வந்தால்… கடும் அபராதம் விதிக்கப்படும்…!!

விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்த பொதுமக்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல் மற்றும் ஜோதிமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான காய்கறி, மளிகை கடை, பழக்கடை போன்ற பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுத்தியுள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் பல பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |