மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படும் நிலை இனி ஏற்படாது என மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் உறுதி
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மக்களவைத் தேர்தல் வடசென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளர் மற்றும் முன்னாள் காவல்துறை ஐஜி மவுரியா அவர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வீடு வீடாக சென்று எளிமையான முறையில் வாக்கு சேகரித்து வந்தார் நிலையில் தண்டையார்பேட்டை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் குப்பம் ஆகிய பகுதிகளில் நிலவும் முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்
மேலும் தெற்கு பகுதியில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது போல வடக்கில் இருந்து வரும் ரயில்கள் திருவொற்றியூரில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார் மேலும் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மீத்தேன் பிரச்சனை கள் முற்றிலுமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.