ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் தொடர்ந்து வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக கூறினார்..
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அதில், உறவினர் ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். மேலும் “நீங்கள் (பெற்றோர்) இல்லாத நேரத்தில் அந்த உறவினர் (சகோதரர் முறை) என்னை வலுக்கட்டாயமாக மிரட்டி அத்துமீறி தவறாக நடந்துகொண்டார். இதனை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன் என மிரட்டினார்” என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.
பின்னர், சிறுமியின் பெற்றோர் சிந்தி முகாம் போலீஸ் ஸ்டேஷனில் அந்த உறவினர் மீது புகார் கொடுத்தனர்.