Categories
உலக செய்திகள்

“நதியில் நீருக்கு பதில் கற்கள்| மட்டும் இருக்குமாம்..? இது எப்படி சாத்தியம்… இயற்கையின் அதிசயம்..!!

ரஷ்யாவில் உள்ள யூரால் மலைப் பகுதியில் நதியில் நீருக்கு பதிலாக கற்கள் மட்டுமே இருப்பது மிகவும் விசித்திரமாக உள்ளது.

இந்த உலகம் பல்வேறு மர்மங்கள் நிறைந்தது. ஆனால் இந்த பகுதியில் தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்கு பதிலாக கற்கள் உள்ளது. ரஷ்யாவில் உள்ள யூரால் மலைப் பகுதியில் இந்த கற்களின் நதியை ஸ்டோன் ரிவர் என்று அழைக்கின்றனர். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் கற்களை மட்டுமே இந்த நதியில் பார்க்க முடியும். நதி நீரோடை போலவே தெரியும். ஆனால் நீரோடையில் 200 முதல் 500 மீட்டர் வரை பெரிய கற்கள் மட்டுமே இருக்கும். இந்த கற்கள் சிறியது முதல் பெரியது வரை உள்ளது.

10 டன் எடையுள்ள இந்த கற்கள் 4 முதல் 6 அங்குலம் புதைக்கப்பட்டு இருக்கும். இதில் இதில் தாவரங்கள் வளர வில்லை. ஆனால் நதியின் இரு புறத்திலும் சில மரங்கள் வளர்ந்துள்ளது. கற்கள் எங்கிருந்து வந்தது அது எப்படி இந்த நதி வடிவத்தை எடுத்தது என்பது இதுவரை அறியமுடியவில்லை. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பணியால் போர்த்தப்பட்டு இருந்ததாகவும், பனி உறைந்து நீர் வற்றியவுடன் இவ்வாறு பாறைகளாக மாறியுள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் மிகப் பெரிய கற்கள் எப்படி நதியாக மாற முடியும் என ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நதியில் தண்ணீருக்கு பதில் பெரிய பெரிய கற்கள் பரவுவதற்கு காரணம் இன்னும் அறியப்படவில்லை.

Categories

Tech |