Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்திய நாட்டை ஆண்டதிலே…. உருப்படியான ஒரே பிரதமர் இவர் தான் …. சீமான் பளிச் பதில்!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடஒதுக்கிட்டை நமக்கு பெற்றுக்கொடுத்தது நம்முடைய பெருந்தகை நம்முடைய தாத்தா பெரு மதிப்பிற்குரிய ஆணை முத்து என்பதை தமிழ் இளம் தலைமுறையினர் மறந்திடக் கூடாது. புள்ளி விவரத்தை பார்க்கின்றார். என்னடா நமக்கு எதுவுமே இல்லையடா. நம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே இல்லையே என்று டெல்லிக்கு அவர் நண்பர்களை கூட்டிக்கொண்டு போறார்.

19778 ல போறாரு. 78 ல போய் டெல்லியில் குடியரசு தலைவரை சந்திக்கிறார்,  பிரதமரை சந்திக்கிறார்,  பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார். எல்லாம் மாநில முதல்வர்களையும் சந்தித்து, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களுக்கான இந்த வகுப்பாரி பிரதித்துவத்தின் அவசியத்தை எடுத்து ஒரு மகன் பேசுகிறார். நல்லா ஆங்கிலம் பேசுவார். பேசி, அவர்களுக்கு புரிய வைத்து ஒரு கிளர்ச்சியை ஓராண்டுக்குள் உண்டு செய்கிறார் என் அன்பு தம்பி, தங்கைகளே என் பெற்றோர்களே….

1979இல் ஒரு பெரிய கிளர்ச்சியை செய்தவர். வேறு வழியே இல்லாமல் V.V  மண்டல் தலைமையிலேயே ஒரு குழுவை அமைக்கிறார்கள். அதான் மண்டல் கமிஷன் என்று வருகின்றது. அந்த  மண்டல் 1979 இல் அமைக்கப்பட்ட அந்த குழு 1982 ல் ஒரு அறிக்கையை தாக்கல் செய்து. அந்த அறிக்கை எப்போது ஆணையாக வருது ? 1990 இல் மதிப்புக்குரிய பெருந்தகை… இந்திய நாட்டை ஆண்டதிலே உருப்படியான ஒரே பிரதமர் ஐயா விபி சிங் அவர்கள் ஆட்சிக் காலத்தில்,  அது அரசாணையாக மாறுகிறது.

8 ஆண்டுகள் எடுத்திருக்கான் பாருங்க.  82 எங்க ?  90 எங்கே ? எட்டு ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது இருக்கு. அந்த அரசாணை 1990இல் வந்த பிறகு தான்,  நாடு எங்கிலும் தலைவர்களும், மாணவர்களும் வீதியில் வந்து கிளர்ச்சி செய்ய தொடங்கி விட்டார்கள். ஆஹா..! நம்மள இவ்வளவு காலம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்று,  ஒடுக்கப்பட்ட –  பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தியா ஒன்றிய நிலப்பரப்பு முழுவதும் வாழ்கின்ற எல்லா மாநிலங்களிலும் புரட்சி வந்தது என தெரிவித்தார்.

Categories

Tech |