Categories
உலக செய்திகள்

யாருமே எதிர்பார்க்கல…! தாயை தலையில் நிற்க வைத்தபடி அந்தரத்தில் நடந்த மகன்…. பார்வையாளர்கள் ஷாக்….!!!!

ரஷ்யாவில் நபர் ஒருவர் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள ட்யூமன் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் முக்மத் சுவன்பேகோவ் என்ற நபர் தனது தலைமீது தாயை நிற்க வைத்தபடி சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது முக்மத் சுவன்பேகோவ்-ன் கால் எதிர்பாராத தடுமாறியுள்ளது. பின்னர் அடுத்த சில நொடிகளிலேயே சுமார் 24 அடி உயரத்திலிருந்து முகமது தவறி கீழே விழுந்தார். சர்க்கஸ் நிகழ்ச்சியை ரசித்து கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இந்த திடீர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |