உருமாறிய கொரோனா மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பிரிட்டனுடனான தங்களுடைய விமான போக்குவரத்தை தடை செய்தது. இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் உள்ளிட்ட ஊரடங்கு விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரகால நிலைக்கான தொழில்நுட்ப தலைவர் மரியா வான் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது இங்கிலாந்தில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய கொரோனாவானது குறைந்தது 82 நாடுகளில் பரவியுள்ளது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா 39 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உருவான ஒரு வகையான கொரோனா 29 நாடுகளில் பரவி உள்ளது என்று பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.