தென் கொரியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in) சார்ந்த ஆளுங்கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடி இருக்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை கொன்று குவித்து மிரட்டி வரும் நிலையிலும் தென்கொரியாவில் நேற்று பொதுத் தேர்தல் நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆளும் ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
மொத்தம் அந்நாட்டில் 300 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சி 180 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சி நோக்கிய 103 இடங்களை மட்டுமே பிடித்தது. இந்த வெற்றி மீண்டும் ஆளும் கட்சிக்கு எப்படி சாத்தியமானது என்றால் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் மூன் ஜே இன் எடுத்த நடவடிக்கை தான் காரணம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.