ஸ்பெயினில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டு செல்வதால் அங்கு சவப்பெட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாள்தோறும் மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகின்றது. இந்தக் கொடிய வைரசால் ஸ்பெயின் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இதுவரையில் 13 ஆயிரத்து 169 பேர் பலியாகி உள்ள நிலையில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு சவப்பெட்டிகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சவப்பெட்டிகள் லாரிகளில் அடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றது.
அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் குமிழி உறைகளில் வைக்கப்பட்டு சீல் வைத்த பின் சவப்பெட்டிகளில் வைத்து கல்லறைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பில்லாமல் இறப்பவர்களின் உடல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதேபோன்று கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.