ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தங்களின் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையை அடுத்த சின்ன போரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மாழ்வாரின் ஏழாம் வருட நினைவு நாளையொட்டி அவருடைய உருவ படத்திற்கு சீமான் மரியாதை செலுத்தியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் முடிவை நான் வரவேற்கிறேன். அரசியல் விமர்சனம் செய்து அவரையும், அவருடைய குடும்பத்தையும் மேலும் அவருடைய ரசிகர்களையும், நான் எதாவது கூறி காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.