Categories
உலக செய்திகள்

சிலை போல் நிற்கும் நாய்கள்…. வால் கூட ஆடவில்லை… வைரல் வீடியோ..!!

ஸ்வீடன் நாட்டில் 3 நாய்கள் உரிமையாளரின் கட்டளையின் படி  சிலைபோன்று அசையாமல் நின்ற  வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்வீடன் நாட்டில் சண்ட்ஸ்வல் என்ற இடத்தைதில் வசித்து வரும் எவ்லின், ஆஸ்திரேலியன் கெல்பிஸ் வகையைச் சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்களுக்கு ஜாக்ஸன், (Jackson) கேஷ் (Cash) மற்றும் எக்ஸ் (X ) என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த 3 நாய்களும் அவர் சொல்வதை சரியாக செய்யும்.

Image result for Jackson is raising and naming the dogs, Jackson (Cash) and X (X). These 3 dogs will do exactly what he says.

அதன்படி  அந்த நாய்கள் வேட்டைக்குப் புறப்படும் முன்பு  எவ்லினின் கட்டளையின்படி செதுக்கி வைத்த கல் சிற்பம் போல  அசையாமல் 30 நொடி மேல் நோக்கி பார்த்து நின்றன. பின்னர் எவ்லின் மறு உத்தரவிட்டதும் வில்லில் இருந்து பாயும் அம்பு போல் சீறிப் பாய்ந்து சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |