Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 2 பேரும், நெல்லையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 0.68%ஆக உள்ளது. இது இந்தியாவிலேயே குறைவு, எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |