தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டசபை தேர்தல் தொடர்பாக கடலூரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் .
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ” தமிழக முழுவதும் 7000 ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. கடலூரில் 178 வாக்குச்சாவடி மையங்கள் பத்தற்றமானவை. தமிழகத்தில் பாதுகாப்பு பணியானது எப்போதும் போல் சிறப்பாகவே இருக்கும். மேலும் தமிழகத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.