Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ்….. 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.88% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 141 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 518 பேர் ஆண்கள், 356 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 12,737 ஆண்களும், 7,504 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 43 அரசு மற்றும் 28 தனியார் மையங்கள் என மொத்தம் 71 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது 8,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 11,334 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,66,550 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |