தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரக்கூடிய நிலையிலே தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான நீர்த்தேக்கங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் நீர் கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாவட்டம் என்று இல்லாமல் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சுமார் 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 90.22 சதவீத கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது.
சென்னையை பொறுத்த வரை பூண்டி நீர்த்தேக்கம் 88.33%, சோழவரம் 75.86% , செம்பரம்பாக்கம் ஏரி 88.20% நிரம்பியுள்ளதாக நீர் வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேட்டூர் உள்ளிட்ட 11 நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர் கனமழையால் நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருகின்றன என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.