டாஸ்மார்க் திறந்ததால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வரும் சூழலில் மீண்டும் டாஸ்மாக் மூடப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து கொரோனா பரவியதில் டாஸ்மாக்கு பெரும் பங்குண்டு என்பதை அறிந்தும், டாஸ்மார்க் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என தெரிந்தும் ஸ்டாலின் கடைகளை திறக்க அனுமதி வழங்கி இருப்பது யார் குடியை கெடுக்க? என சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபோன்ற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் டாஸ்மாக் திறக்க அனுமதி அளித்தது ரத்து செய்யப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.