தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியானது.. அதில், இன்று தமிழகத்தில் இதுவரை 102 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 59 அரசு, 43 தனியார் ஆகும். இன்று மட்டும் 36,628 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 15,00,909 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 3,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,261 ல் இருந்து 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 85,915 பேர் மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,898 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,410 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.