Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதற்கெல்லாம் அனுமதி… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த முழு ஊரடங்கு உத்தரவில் எதற்கெல்லாம் அனுமதி:

நேர்முகத் தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம்.

மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம்.

உணவு மற்றும் மளிகை பொருட்கள் வினியோகம் செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி.

தொலைத்தொடர்பு மற்றும் அதனை சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |