தமிழகத்தில் அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு கூட கடன்சுமை இருக்கும் என்று மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கடன் சுமை தற்போது 5.7 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் இன்று பஸ்ஸில் தாக்குதலின்போது கூறியிருந்தார். கடந்த ஆண்டில் மட்டும் அரசின் கடன் 1,13,340 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2011-இல் திமுக முடிந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது அரசின் கடன் 1,01,430 கோடியாக இருந்தது.
தற்போது பத்து வருடங்களில் அது 5 மடங்காக அதிகரித்துள்ளது. அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் அடுத்து பிறக்கும் குழந்தையின் தலையில் கூட மொத்தம் 62 ஆயிரம் கடன் சுமை இருக்கும். மத்திய அரசின் கடன் சுமை தனி. இவ்வாறு அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது என்று மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.