Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடை, மீறினால்… கடும் உத்தரவு…!!!

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஆன்லைன் விளையாட்டுகளை யாரும் விளையாட வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமில் ஆபாசமான பேச்சுகளை பயன்படுத்தி விளையாடிய பப்ஜி மதனை இன்று காலை தர்மபுரியில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். அந்த விளையாட்டில் அவர் பேசியதை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் யாரும் விளையாட வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். நீரினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஆபாச பேச்சுக்களைப் பேசும் இணையதள விளையாட்டுகளில் யாரும் சப்ஸ்கிரைப்பாராக சேர வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |