தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000 கடந்தது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50ஐ கடந்த நிலையிலேயே உள்ளது.. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,821ல் இருந்து 1,885 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இது கவலை தரும் செய்தியாக இருந்தாலும் கூட, இன்று ஒரே நாளில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 960ல் இருந்து 1,020 ஆக அதிகரித்துள்ளது. இந்த செய்தி தமிழக மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருக்கிறது..
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விவரம் இதோ: