Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் +2 பொது தேர்வு ரத்து… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வந்த தொற்று காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதையடுத்து பல மாநிலங்களும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. மேலும் இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு  தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்களின் கருத்தின் அடிப்படையில் விரிவான அறிக்கையை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில் மாணவர்களின் உடல், மன நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |