Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் சங்கிகள் அதிகமாகிட்டாங்க – வேல்முருகன் எச்சரிக்கை …!!

தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று உபா என்கின்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

பாஜக, ஆர்.எஸ்.எஸ் உங்களுடைய கொட்டம், உங்களுடைய அடாவடி உங்களுடைய அநியாய பேச்சுகள்,  உங்களுடைய அநியாய கொலைகள், உங்கள் அநியாய குண்டுவெடிப்புகள்,  கல்பூர்கி போன்ற மிகப் பெரிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் படுகொலைகள். உத்தரபிரதேசத்தில் கெளதம் என்ற ஒரு தலித் பேராசிரியர்…  அம்பேத்கரை படியுங்கள்… இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படியுங்கள்….  இந்து மதம் சட்டம் என்ன சொல்கிறது என்று படியுங்கள்… என்று சொல்லி ஒரு கருத்தை பதிவிட்டதற்காக….

ஏபிவிபியின் மாணவர் அமைப்பு அவரை கொலை செய்வதற்காக கல்லூரி வளாகத்தில் ஓநாய்கள் போல் கம்போடும், வீச்சருவாளோடும் தேடி அலைந்திருக்கிறார். கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து, பணிநீக்கம் செய்து, அவரை தூக்கி எறிகிறது. நான் கேட்கிறேன்….  இந்தியாவின் பன்முகத் தன்மையை, இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிற இந்த சங்கிகளின் கொட்டமும்,  இன்று தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |