Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று 117 பேர்… 12 ஆவது நாளாக உயிரிழப்பு 100ஐ கடந்தது..!!

தமிழகத்தில் இன்று 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 5 மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். அதே நேரத்தில் உயிரிழப்பும் நாளுக்குநாள் 100ஐ  கடந்து பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் 1,14,260 ஆக எகிறியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,556 குணமடைந்து வீடு திரும்பியதால், 2,67,015 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 53,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 12 ஆவது நாளாக உயிரிழப்பு 100ஐ கடந்து பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |