தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியானது.. அதில், இன்று தமிழகத்தில் இதுவரை 106 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 53 அரசு, 53 தனியார் ஆகும். இன்று மட்டும் 39,776 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 16,25,558 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 4,526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,798 ல் இருந்து 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 2,099-ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று மட்டும் 4,743 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 66.05 % பேர் குணமடைந்துள்ளனர். இன்று கொரோனா பாதிப்பை காட்டிலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.. தற்போது தமிழகத்தில் 47,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.