Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று அதிர்ச்சி – கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைவு..!!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது.. அதில், இன்று தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19 பரிசோதனை நிலையங்கள் 113 (58 அரசு + 55 தனியார்) உள்ளன.. இன்று மட்டும் 58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 5,849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,643 ல் இருந்து 1,86,492  ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 சேர்க்கப்பட்டுள்ளது.. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இன்று 4,910 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670  ல் இருந்து 1,31,583 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 70.56 % பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… தற்போது தமிழகத்தில் 51,765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |