ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. இருப்பினும் பல மாவட்டங்களில் தொற்று சீராக குறைந்து வராத காரணத்தினால் ஊரடங்கு தளர்த்துவதா வேண்டாமா என்பது குறித்தும், ஊரடங்கை நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து தலைமை செயலாளர் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அதிகரித்துள்ள கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கவும், கொரோனா குறைந்துள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.