தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1683ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளநிலையிலும் பதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமான உயர்ந்துள்ளது. அதிக பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழ்நாடு ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் சிறப்பான மருத்துவத்தால் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் தமிழகத்தை வைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை சார்பாக வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியன் தகவலில் தமிழகத்தில் 400ஆக புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1683ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 20ஆக அதிகரித்துள்ளது.