ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ணவரம் அருகே கெல்லனப்பள்ளி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் நான் இன்னும் 10 நாட்களில் இறந்து விடுவேன் என்று கூறி வருகிறார். அதோடு இறந்த பிறகு அடுத்த 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவேன் என்றும் கூறுகிறார். இந்த பாதிரியாரின் பேச்சால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நான் இன்னும் 10 நாளில் இறந்து விடுவேன் என்று கூறும் பாதிரியார் தனக்கு சொந்தமான இடத்தில் சமாதி தோண்டியதோடு, ஒரு பிளக்ஸ் பேனரையும் வைத்துள்ளார். அதில் 10 நாட்களில் இறப்பு, மீண்டும் 3 நாட்களில் உயிர்த்தெழுதல் தொடர்பான வாசகங்கள் அடங்கியுள்ளது. இதனால் பாதிரியாரின் குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருப்பதோடு செய்வதறியாது தவித்து வருகிறார்கள். மேலும் இன்றைய நவீன காலகட்டத்தில் இப்படி கூட மூடநம்பிக்கை நிலவுகிறதா என்று மக்கள் அனைவரும் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள்.