Categories
அரசியல் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேட்டில்….! ”ஈபிஎஸ் மீது நடவடிக்கை” … நீதிபதி அதிரடி முடிவு ..!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். அதில், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று திமுக மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் முறையிடப்பட்டது.  அந்த விசரணையில்,  சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

அதிலும், சென்னை உயர்நீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து முடிக்கலாம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுகவினுடைய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் டெண்டர் வழங்கியதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு  நடந்துள்ளதாகவும், அப்பொழுது இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தான் வழக்கு தொடரப்பட்டது என தெரிவித்தார்.

தற்போது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதால் என்னுடைய  வழக்கை திரும்ப பெறுவதாக வாதிட்டார். அதற்கு எடப்பாடிப்பு தரப்பில் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி,  இந்த வழக்கைப் பொருத்தவரை தற்போது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அந்த அறிக்கை என்பது விஜிலன்ஸ் ஆணையரிடம் உள்ளதாகவும்,  அவர் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார் என்றும், அந்த நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தெரிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

அதற்கு எடப்பாடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் வரை விஜிலன்ஸ் ஆணையர் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்க வேண்டும்  என்று வாதிடப்பட்டது. அதற்கு அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், விஜிலென்ஸ் ஆணையர் டெண்டர் முறைகேட்டில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

Categories

Tech |