Categories
உலக செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் இருந்த 16 அடி பாம்பு “ஒருநாளைக்கு 100 பாம்புகள் பிடிப்போம்” தீயணைப்பு வீரர்..!!

தாய்லாந்தில், ஒரு வீட்டின் மேற்கூரையில் பதுங்கியிருந்த  16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக பிடித்துள்ளார்.  

தாய்லாந்தின்  தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையில் 16 அடி மலைப்பாம்பு ஒன்று பதுங்கி கிடப்பதாகவும், அதனை உடனே வந்து பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு போன் செய்து வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரரான பின்யோ புக்-பின்யோ என்பவர் லாவகமாக  அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் போட்டார்.

Image result for In Thailand, a 16-foot-long python was caught on the roof of the house

பாம்பை பிடிக்கும் அந்த காட்சிகளை வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் தீயணைப்பு வீரர் புர்பின்யோ கூறுகையில்,   இதுபோல  நாகப்பாம்பு உள்ளிட்ட பல கொடிய விஷ தன்மைகளை உடைய பாம்புகளை தாங்கள் பிடித்துள்ளதாக  தெரிவித்தார். மேலும், அவர் தெரிவிக்கையில், பாங்காக்கில் தீ விபத்துகளை காட்டிலும்  பாம்புகளை பிடித்து செல்வதே பெரும் பணியாக இருக்குமென்றும்,  ஒரு நாளைக்கு  100 பாம்புகள் பிடிக்கப்படும் என்றும், பெரும்பாலும் மழைக்காலங்களில் அதிக பாம்புகள் வீட்டு தோட்டம் மற்றும் கழிவறைகளில் பதுங்கியிருக்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |