புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்று வந்த தம்பதியினர் விபத்தில் சிக்கியது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது
பேராவூரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தான் ராமமூர்த்தி, இவரது மனைவி நாகம்மாள், இருவரும் நேற்றைய தினம் மாலையில் கிராமத்திற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று புத்தாண்டை முன்னிட்டுவழிபட்டுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்
அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாகம்மாள் இறந்தார்.
இதனையடுத்து ராமமூர்த்தி அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் மேலும் விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற ஓட்டுநரை அப்பகுதி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்