கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்தப் படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல்ஹாசன் அடுத்ததாக பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.