Categories
மாநில செய்திகள்

பசியைப் போக்கும் பணியில் ஈடுபடுவீர்… மு க ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா எதிராக போராடும் பணியில் மக்களின் பசியைப் போக்க பாடுபடவேண்டும் என்று முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இவற்றில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரடங்கால் தமிழக மக்களின் உணவு தேவைக்கு எவ்வித தடையும் ஏற்படாத வகையில் பசியாற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Categories

Tech |