புலியிடம் இருந்து கண் இமைக்கும்நொடியில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவி ஒருவர் தப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடகு மாவட்டம், பொன்னாம்பட்டி டி செட்டிகெரே பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரின் பேத்தி சஷ்மா. இவர் இரண்டாம் ஆண்டு பியுசி படித்து வருகிறார். பள்ளியில் தேர்வு நடந்ததால் அதில் கலந்துகொள்ளச் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் புலி ஒன்று இவரை கடந்து சென்றது.இவர் தான் புலியை பார்த்தார். ஆனால் சஷ்மாவை புலி பார்க்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சஸ்மா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அதிர்ஷ்டவசமாக புலி அங்கிருந்து காப்பி தோட்டத்திற்குள் சென்றதால் அவர் தப்பித்தார். அந்த வழியாக சென்ற பள்ளி மாணவர்கள், ஊர் மக்கள் உதவியுடன் சஸ்மாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனப்பகுதியில் பார்வையிட்டு அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் புலி நடமாட்டம் இருப்பது உறுதியானது. இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் புலியை கூண்டு வைத்துப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.