நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் பொது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
2021-2022 க்கான மத்திய பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். இதனால் நிறுத்தியமைச்சருக்கு தமிழ் மேல் உள்ள பற்றின் காரணமாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த வருடமும் இதே போன்று திருக்குறளை மேற்கோள் கட்டி பேசிய போதும் அனைவரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
அதாவது “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்று திருக்குறளை மேற்கோள் காட்டியும் பட்ஜெட்டில் வரிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பட்ஜெட் உரையை தொடங்கியபோது “இருளில் தவிக்கும் நமக்கு நம்பிக்கை அளிப்பது ஒளியே” என ரவீந்திர தாகூரின் வரிகளை மேற்கோள் காட்டி தொடங்கினார். நிதியமைச்சரின் இந்த தமிழ் மீது கொண்ட ஆர்வத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.