டெல்லி மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 20,834 ஆக உள்ளது. இந்திய அளவில் 10.61% பேர் டெல்லியில் உள்ளனர். கடந்த 4 நாட்களாக 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
A petition has been filed in Delhi High Court against the sealing of borders of the national capital for a week by Delhi Government.
— ANI (@ANI) June 2, 2020
பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பின்னர் எல்லையை திறப்பதா? அல்லது நீடிக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் டெல்லி மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.