Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்ட உரிமையாளர்… “போதையில் கொன்று விட்டேன்”… கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர்..!!

வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் போதையில் கொன்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துவருபவர் குணசேகரன்.. 50 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவர்.. இவர், குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடுகளை கட்டி, அதில் ஒரு பகுதியை தன்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.. ஊரடங்கு காரணமாக, தன்ராஜ் 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்றிரவு தன்ராஜ் குடும்பத்தினரிடம் குணசேகரன் வாடகை கேட்டு கண்டித்துள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் வெளியே சென்ற தன்ராஜ் மகன் அஜித் (21) மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரது பெற்றோர் நடந்த சம்பவத்தை மகனிடம் கூறியுள்ளனர். இதில் கடும் கோபமடைந்த அஜித் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார்.. உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக குணசேகரன் தெரு வழியே ஓடியுள்ளார்.. ஆனாலும் அஜித் விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக குணசேகரனை குத்தியதில் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் குணசேகரன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. அதனைத்தொடர்ந்து அஜித்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், அஜித் தான் மதுபோதையில் வீட்டின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொன்று விட்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடகை வீட்டில் இருப்பவர்களிடம், அதன் உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு தொந்தரவு ஏதும் செய்யக்கூடாது என்று அரசும், நீதிமன்றமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |