Categories
அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியில் திக்.. திக்..! யாருமே முன் வரல… 3 மணிக்குள் பெரும் எதிர்பார்ப்பு… தொடரும் உச்சகட்ட குழப்பம் …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்தற்கான பணி என்பது தீவிரமடைந்து வருகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில்  யாரும் தங்களது  வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை.

இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே இந்த வேட்பு மனுவை வாங்கி இருக்கிறார்கள். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று மூன்று மணி வரை மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என மத்திய தேர்தல் கமிட்டி தலைவர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார். தற்போதைய நிலவரை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராக அறியக்கூடிய மல்லிகார்ஜு கார்கே திடீர் திருப்பமாக இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்வது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாக இருக்கிறது.

தற்பொழுது செய்தியாளரிடம் பேசிய மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் இந்த தேர்தலில் மல்லிகார்ஜுனா கார்கே போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேபோன்று சசிதரூர்  மேலும் மூத்த தலைவரான திக்விஜய்  சிங் உள்ளிட்டோரும் இன்றைய தினம் தங்களுடைய வேட்புமனுவை 12 மணிக்கு மேல் அடுத்தடுத்து தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

முதலாவதாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தியின் தேர்வாக இருந்தவர் அசோக் கெலாட்.  ராஜஸ்தான் மாநில முதல்வராக தற்போது இருக்கக்கூடியவர். அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து பணிகளும் தயார் செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்ததன் காரணமாக,  காங்கிரஸ் கட்சியில் உச்சகட்ட குழப்பங்கள் என்பது அவரால் தான் அடுத்தடுத்த நிகழ்ந்தது.

தற்பொழுது இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் சோனியா காந்தியின் மற்றொருவராக கண்டறியப்பட்டு இருப்பவர்தான் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்,  பத்து முறைக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போதைய மாநிலங்களவை காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடிய மல்லிகார்ஜுனா கார்கே. இவர் இன்றைய தினம் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார்.

சோனியா காந்தியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பார்க்கக்கூடிய இவருக்கு வெற்றி வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மூன்று மணி வரை நேரம் இருப்பதன் காரணமாக இன்னும் யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யப்படவில்லை. ஒரு பக்கம் தொண்டர்கள், நிர்வாகிகள்,

மூத்த தலைவர்கள் டெல்லியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அடுத்தடுத்ததாக  கூடியிருக்கிறார்கள். இதனால் இன்றைய தினம் இந்த மூன்று மணிக்குள் காங்கிரஸ் கட்சியில்  நிலவ இருக்கக் கூடிய உச்சகட்ட குழப்பம் என்பது முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் மிஸ்திரி அவர்கள் நானும் இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |