Categories
டெக்னாலஜி

கொரோனா காலத்தில்…. வீடியோ காலில்… சாதனை படைத்த கூகுள்…!!

வீடியோகாலில்  கூகுள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் விளங்கி வருகின்றது. இந்நிறுவனம் 2020ம் வருடத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த வருடத்தில் உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட லாக் டவுன் காரணமாக தொடர்பு மேற்கொள்வதில், மக்கள் அனைவரிடமும் வீடியோ அழைப்புகளுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டிருந்தது. இதற்கான சேவையை Google Duo, Google Meet போன்றவற்றின் ஊடாக கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை வீடியோ அழைப்புகளில் 1 ட்ரில்லியன் நிமிடங்களிற்கும் மேலாக வீடியோ அழைப்புகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வருகின்ற 2021 வருடத்தில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை கால நேர வரையற்ற சேவையினை பயனர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. இதனால் இனி வரும் மாதங்களில் கூகுள் நிறுவனம் மேலும் பல சாதனைகளை படைக்க உள்ளது.

Categories

Tech |