Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிசை மாற்று வாரியத்தில்… வீடுகள் கேட்டு மனு அளித்த பெண்கள்… நாளை கடைசி நாள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பெண்கள் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள சின்னமனூர் பகுதியில் 432 வீடுகளும், கோம்பையில் 480 வீடுகளும், தம்மனம்பட்டியில் 240 வீடுகளும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ள நிலையில் கடந்த 30ஆம் தேதி முதல் வீடுகள் இல்லாத பொதுமக்களிடம் மனு பெரும் முகாம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகின்றது. இதில் மனு அளிக்க விருப்பமுள்ளவர்கள் மனுதாரர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், கணவன்-மனைவி ஆதார் அட்டை நகல் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மனு அளிப்பதற்கு நாளை கடைசி தினம் என்பதால் உத்தமபாளையம், கோகிலாபுரம்,கம்பம், கூடலூர், சின்னமனூர், ஓடைப்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமானோர் மனு அளித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்திற்கு ஏரளமான பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்று மனு அளித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோம்பை உத்தமபாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்துள்ளனர்.

Categories

Tech |