நெல்லை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறி, மளிகை கடை, பழக்கடை மற்றும் பூக்கடைகள் வழக்கம்போல திறக்கப்பட்டுளள்து.
இதனையடுத்து ஒர்க்ஷாப், எலக்ட்ரிக் கடைகள், ஹார்ட்வேர், உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் செயல்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களும் மிகவும் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படுகின்றது. அதேபோல் வங்கிகளும் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து பணபரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் ஜவுளி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நகை கடைகள், சலூன் கடைகள், டீ கடைகள் போன்ற கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியே செல்லும் போது பொதுமக்கள் கட்டாயமாக இ-பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.