கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் திமுகவை விமர்சித்து பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவந்தன. சில போஸ்டர்களில் யார் என்ன என்பது எதுவும் தெரியாமல் வெறும் போஸ்டர்கள் மட்டும் ஒட்டப்பட்டுவந்தன. இது திமுகவினர் இடையேயும், திமுக ஆதரவு கட்சியினர் இடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதே சமயம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவந்தது. அதனிடையே கோவையில் பரப்புரைக்கு வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியையோ அல்லது திமுக தலைவர் ஸ்டாலினையோ விமர்சித்து ஏதேனும் போஸ்டர்கள் இனி கோவையில் ஒட்டப்பட்டால், பதிலுக்கு நாங்களும் போஸ்டர்கள் ஒட்டுவோம் என்று கூறி இருந்தார்.
அவர், இவ்வாறு கூறி ஒரு மாத காலம்கூட ஆகாத நிலையில் கோவையில் மீண்டும் ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் ஊரடங்கு காலத்தில் அயராது உழைத்தவரா என்ற கேள்வி கேட்டார்போல் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும், அதன் அருகிலேயே WIG-U வில் மாட்டியவரா? இந்தக் கேள்வி கேட்டார்போல் ஸ்டாலின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது.
அதேபோல் வேறு ஒரு போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்திற்கு அருகில் விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாத்த முதல்வரா? என்றும் ஸ்டாலின் கேலிச் சித்திரத்தின் அருகில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் கையெழுத்திட்டவரா? என்றும் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை ஒட்டியவர்கள் யார் என்று அச்சிடப்படவில்லை.