Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தோண்டிய பள்ளத்தில்…. தேங்கிய நீர்….. ஓசூர் அருகே யானைகள் ஆனந்த குளியல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனத்துறையினர் தூர்வாரிய  குட்டையில் தேங்கிய நீரில் காட்டு யானைகள் கூட்டம் ஆனந்த நீராடியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த அஞ்செட்டி வனப் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் முகாமிட்டு இருந்தனர். இங்கு வனப்பகுதியில் விலங்குகளின்  நீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் சார்பில் ஆங்காங்கே வெட்டப்பட்ட தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வந்தது.

அந்த வகையில், அஞ்செட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள குட்டையில் நீரைத் தேக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில்   வனத்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு ஆழப்படுத்திய குட்டைகளில் சேமிக்கப்பட்டிருந்த நீரில் யானைக்கூட்டம் ஆனந்தமாக நீராடி தாகம் தணித்து சென்றது.

Categories

Tech |