பிரபல ஹிந்தி இயக்குனர் இயக்கும் புதிய வெப் தொடரில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் அறிமுகமாகவுள்ளார்.
ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். இவர் நடிக்கும் வெப் தொடரை பிரபல ஹிந்தி இயக்குனர் சோயா அக்தர் இயக்குகிறார். இதில் ஹிந்தி நடிகர் சையப் அலிகான் மகன் இப்ராகிமும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் குஷி கபூரும் முக்கிய காதபத்திரத்தில் நடிக்கிறார்கள். இதில் நடிப்பதற்காக நடிகை சுஹானா கான் நடிப்பு பயிற்ச்சியும் எடுத்து வந்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் கரன் ஜோகர் படத்தில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில் சோயா அக்தர் இயக்கத்தில் நடிக்க வந்துள்ளார்.