கொரோனா விட மிகப்பெரிய ஆபத்தை எதிர் காலத்தில் காத்திருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மைக்கேல் ரியான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறினார். இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. உலகின் ஒவ்வொரு மூலைக்கும் இந்த நோய் பரவி வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் இதன் தாக்கம் கடுமையானதாக இருக்கும்.
அதற்கு நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வர்ட் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலகம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருகின்றது. தடுப்பூசிகளை உருவாக்குவது உட்பட்ட எதிர்கால நோய்களை தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நாம் இந்தத் தொற்றின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அறையில் இருக்கிறோம். அவற்றை சமாளிக்க இன்னும் தயாராகவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.