Categories
உலக செய்திகள்

உடல்நலக் குறைவு… பதவியை ராஜினாமா செய்த பிரதமர்…!!

உடல்நலக்குறைவால் ஜப்பான் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா காலகட்டத்தில் முதன்மையான தலைவர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த சூழலில் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் அவருடைய பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2006இல் பிரதமராக பதவியேற்ற அவர், 2007இல் ஏற்கனவே உடல்நிலை காரணங்களுக்காக அபே ராஜினாமா செய்துள்ளார்.

அதன்பின் 2012ஆம் ஆண்டில் அபே, பிரதமராக பதவியேற்று 8 வருடங்களாக பிரதமராக இருந்து வந்தார். சமீபத்தில் 2 முறை மருத்துவமனைக்கு சென்று வந்ததால் அபேயின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது பிரதமர் பதவியிலிருந்து அபே விலக விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Categories

Tech |